search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் விபத்து"

    • எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
    • போலீசார் விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர்.

    விழுப்புரம்:

    நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்று 27 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு வந்தது. இந்த பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த நடராஜ் (வயது 40) ஓட்டி வந்தார். இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் தாழ ங்காடு அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்ப இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ஸ்ரீராம் (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக (25) சாதிக் (40)ராஜேந்திரன் (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடை ந்தவர்களை போலீசார் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து பஸ் விபத்துக்காளவது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மத்தில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார்
    • அரசு சொகுசு பஸ் மீது பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை மார்க்கமாக அரசு சொகுசு பஸ்திண்டிவனம் பாதிரி ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கொல்கத்தா மாநிலத்திலிருந்து பல்வேறு கோவிலுக்கு ஆன்மீகம் பயணம் முடித்துவிட்டு கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் சுரேகா,நித்தின், பூனம், ரேகா,ஆகியோர் மதுரையில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக காரானது அரசு சொகுசு பஸ் மீது பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மணிஷ் சுரேகா,சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்தவர்கள் நான்கு பேர் சிறுகாயங்களுடன் மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோ லஊத்தங்கரையில் இருந்து மேல்மருவத்தூருக்கு 30 பக்தர்களுடன்திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தஞ்சாவூரில் இருந்து மேல்மருவத்திற்கு அரசு பஸ் 40 பக்தர்களுடன் சென்று கொண்டிருந்தது.திடீரென எதிர்பாராமல் அரசு பேருந்தானது முன்னால் சென்ற வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணம் செய்த ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 4 பேர் பலத்த காயங்களுடனும் 5-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த இரு விபத்து குறித்தும் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு விபத்துகளால் சுமார் ஒரு மணி நேரம் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த இரு விபத்திலும் கார், பஸ்கள் ,வேன் ஆகியவையில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியில் இருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்திற்கு ஆட்டோவில் ஒலக்கூர் பகுதியை சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது உறவினர் ஆட்டோவில் 9.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    ஆட்டோவை நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏலன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார் அப்பொழுது திண்டிவனம் அடுத்த சாரம் அருகே விழுப்புரம் அருகே ஓட்டேரி பாளையம் பகுதியில் இருந்து 60 பக்தர்கள் பஸ் சென்று கொண்டிருந்தது அப்பொழுது திடீரென முன்னாள் சென்ற ஆட்டோ மற்றும் லாரி மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரும், பஸ்சில் பயணம் செய்த மருவத்தூர் பக்தர்கள் 12 பேரும் விபத்தில் காயம் அடைந்தனர்.மேலும் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வழக்குரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • பெரும்பாறை-புல்லாவெளி இடையே சாலையின் இருபுறமும் வளர்ந்த முட்செடிகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது
    • நெடுஞ்சாலை துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    பெரும்பாறை :

    திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை வரை சாலை இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அந்த வழியாக பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியவில்லை. மேலும் கனரகவாகனங்கள் செல்லும் போது இரு சக்கரவாகனங்கள் விலகிசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புல்லாவெளி-பெரும்பாறை இடையே சில நாட்களுக்கு முன் பஸ், மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் எரிந்தது.

    அடிக்கடி பஸ், வேன் மோதிக்கொள்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து 4 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தடியன்குடிசை முதல் தாண்டிக்குடி வரை சாலையின் இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் அருகே சேதமடைந்த பள்ளங்கி-கோம்பை சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் பள்ளங்கி- கோம்பை கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி வரை மட்டுமே அரசு பேருந்து செல்கின்றது. பள்ளங்கி முதல் கோம்பை சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு அரசு பேருந்தோ தனியார் பேருந்தோ இயங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பள்ளங்கி முதல் கோம்பை வரை 15 வருடங்களுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது வரை முறையான பராமரிப்பு வேலைகள் செய்யாததே காரணமாகும்.

    மேலும் கோம்பை பகுதியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் வாகன வசதி இல்லாததால் தங்களது உறவினர்கள் வீட்டிலோ அல்லது தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கூடங்களில் சேர்ந்தே படிக்கின்றனர்.

    மேலும் மருத்துவ அவசர உதவிக்கு 108 ஆம்புலன் சின் உதவியை நாடினால் தங்களது பகுதிக்கு செல்லும் சாலை சரியாக இல்லாதால் வரமுடியாது என்றும், சில சமயங்களில் அனுப்பி வைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில்லை.

    இதனால் விபத்துகளில் சிக்கி முதலுதவி குறித்த நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். மகப்பேறு காலங்களில் இவர்களது பாடு திண்டாட்டம். சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த கிராமத்திற்கு பெண் கொடுப்பதற்கு பெண் வீட்டார் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது . கடந்த வாரம் கனகு என்பவர் காய்கறி மூடையை தலைச்சுமையாக கொண்டு செல்லும்போது கரடு முரடான சாலையில் தவறி விழுந்து அதிக காயம் ஏற்பட்டதாலும், அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரமறுத்த தாலும் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    எனவே தொடர் விபத்துகளை சந்திக்கும் இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×